செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

காகபுசுண்டர் கல்பம் 4


  • இந்தக் கல்பத்தை காலையிலும்,மாலையிலும்,சாபிட்டுக்கொண்டுவந்து ,12 மாதம் செல்லவும்,இவ்வாறு கொண்டதினால் நம் உடலில் ஏற்படும் குற்றங்கள் நீக்கி கொண்டு 12 வருடம் விடாமல் கொள்ள சித்தனாவாய்.
  • 1 மாதம் கொள்ள மேல்கால்கள் வலி எடுக்கும்,
  • 2 மாதம் கொள்ள சூடு உண்டாகும்.மலம்கழியும்,பேதி உண்டாகும்.
  • 3 மாதம் ஆனால் வாய்வேகும் ஆபான வாய் வரை சூடு உண்டாகும்.
  • 4 மாதம் ஆனால் அசதி வரும் கால்கைகள் நோகும்(வலிக்கும் ).
  • 5 மாதமாகில் வயறு புண்ணாக்கும் ,ஆசனம் வேகும்,பெண் மாய்கை அதிக மாகும்.சிறுநீர் கடுத்து விழும்,விந்தும் விழும் ,நினைவுகள் மாறும் ,வீக்கம் உள்ள இடங்கள் எல்லாம் வெந்து போகும்.5 வது மாதம் மிகுந்த வலி உண்டாகும்,வெயில் படாமல் இருக்கவும்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

காகபுசுண்டர் கல்பம் 3

  • நந்தி கொலு கண்டவனே ஞானி.நடுவனையை பார்த்தவனே சித்தனாகும்.அந்தியும் சந்தியும் கொண்டவனே கற்ப தேகி.ஆத்தாளைப் பூசிதோன் முனிவராவார்.முந்தி வந்ததை விட்டு நடுவே நின்றதை முக்காலும் வாயில் மந்திரம் செபித்து காலையும் ,மாலையும்,சிறப்பாக கொண்டால் சித்தியாகும்.

  • அகார கற்பத்தை இன்னதென்று தெரிந்து கொண்டால் வாலை கிருபை செய்வாள்.முத்தி பெறுவதற்கு நந்தி கொலு  கொண்டால் முடிவான நடுவனையைக் காண வேண்டும்.

  • மத்திபமாய் இருக்கின்ற குண்டலியின் வலிமை கண்டு பிரம்மரந்திரமறிந்து அறிவினால் நாத விந்து வாங்கிக் கொண்டு புகழாக கற்பம் கொள்ளவும்.

காகபுசுண்டர் கல்பம் 2


  • அந்த கற்பம் மூன்று பாகங்களை கொண்டது.அடி,நடு,முடி. என்பதாம்.அதில் நடுவானதுதான் கற்பம்.இதை வாய் திறந்து சொல்லக்கூடாது.மீறி  கூறினால் தலை வெடிக்கும் என்று சித்தர் சாபம் கொடுத்தார்கள்.எனவே சித்தர்களும் சொல்லமாட்டார்கள்.




  • அதற்கு மறைவாக பல பெயர்கள் வைத்தார்கள்,அதை யாரும் காட்ட மாட்டார்கள்,நீயாக அறிந்து கொள்ளவேண்டும்.



  • கருத்தாக பார்த்தால் உனக்கு தோன்றும்.



  • பாட்டு போல் பாடிவிட்டார் கரு சொல்லாமல்.



  • உலகத்தோர் அறியாத கற்பமாகும்,அது நந்தி இருப்பிடமாம்பார்.

காகபுசுண்டர் கல்பம் 1

  • கற்பமுன்ன  அண்டங்களை சுற்ற வேண்டாம்,அது உன்னிடத்திலேயே இருக்கிறது.அது அற்பபொருள் அல்ல,அண்டமும் பிண்டமும் அதுதான்.சாதாரணமாக பார்த்தால் தெரியாது.அந்த கற்பம் நன்றாக நம்முள்ளேயே முடிந்துள்ளது.


  • நல்ல முறையில் உன்னுள்ளே முடிந்து இருப்பதால் வெளியில் வேறு கற்பம் உண்ணவேண்டாம்.தேட வேண்டாம் .மேலான கற்பம் அகாரமாகும்.


  • அகார கற்பம் என்ன என்று தெரிய வேண்டுமெனில் வாலையைப் பூசிக்க வேண்டும்.அதை அறிந்து கொள்ள புத்தி வேண்டும்.



  • உகார கற்பம் சக்தியை பூசிக்க வேண்டும்.மனோன்மணியை பூசை செய்வாய்.



  • மகார கற்பம் அடைய யோகம் வேண்டும்.அதன்பிறகு சிகார கற்பம் அடைய முடியும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

காகபுசுண்டர் கல்பம்

வசிஷ்டர் கேட்க புசுண்டர் கூறியது:


கற்பம் 2 வகைப்படும்.சுக சரீரம் அழியாமல் இருபதற்க்கு நல்ல கற்பத்தில் ஒன்று வாலை பூஜை என்ற ஞான கற்பம் ஒன்று ஆகும்.இந்த அக காயகல்பம்,புற காயகல்பம் எல்லோருக்கும் கிட்டாது.முனி ,ரிஷிக்கு கிட்டும்.திறமையானவர்கள் கல்பத்தை புசிப்பார்கள்.மற்றவர்களுக்கு அதைபற்றி ஒன்றும் தெரியாது.


  1. அகாரம் முதல் கற்பம் ,
  2. உகாரம்  இரண்டாம் கற்பம்,
  3. மகாரம்  மூன்றாம் கற்பம் ,
  4. சிகாரம்  நான்காம் கற்பம்.



  • இவை நான்கையும்  உண்டவன் சித்தன் 12 வருடம் சென்றால் முக்கியமான கற்பம் முடியும்.